ADDED : ஏப் 03, 2026 07:56 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் சுதந்திர போராட்ட வீரர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் நினைவு நாளையொட்டி, வடதமிழ்நாடு மக்கள் முன்னணி சார்பில் கடலுார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநில தலைவர் தனசிங், வர்மா ராஜதுரை, மாநில ஒருங்கிணைப்பாளர் சாமிகச்சிராயர், மாநில மகளிரணி ஜெயக்கொடி உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து சமூகநீதி, சமத்துவம் மற்றம் பிராந்திய வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட உறுதிமொழி ஏற்றனர்.
