UPDATED : அக் 07, 2026 07:29 PM
ADDED : அக் 07, 2026 07:26 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: போக்சோ வழக்கில் கோர்ட்டில் ஆஜராகமல் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை துப்பரவு பணியாளர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் அரவிந்த்,26; கடந்தாண்டு, போக்சோ வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்தவர், வழக்கு விசாரணைக்கு கடலுார் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.
அதன்பேரில் தலைமறைவாக இருந்த அரவிந்தை பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
