UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 10:38 PM

அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: போக்சோ வழக்கு தலைமறைவு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த நெய்வாசலைச் சேர்ந்த முத்துச்செல்வன் மகன் நவீன் 21; இவர், கடந்த 2024ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலத்தாரம் செய்த போக்சோ வழக்கில், காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்தனர்.
ஜாமினில் வெளியே வந்த நவீனர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாததால், நீதிபதி பிடியாணை பிறப்பித்தார். அதன்பேரில் தலைமறைவாக இருந்த நவீனை காட்டுமன்னார்கோவில் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
