ADDED : செப் 27, 2026 09:40 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த ராமாபுரம், கிழக்கு தெரு பொன்னுசாமி மகன் ஆனந்தன்,45; இவர் கடந்த, 2019 ம் ஆண்டு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின் கோர்ட் பிணையில் வெளியில் வந்த ஆனந்தன்,தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
இதனால் தலைமறைவாக இருந்த ஆனந்தை பிடிக்க கோர்ட் பிடியாணை பிறப்பித்தது. அதனடிப்படையில் நடுவீரப்பட்டு போலீசார் தலைமறைவாக இருந்த ஆனந்தனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
