ADDED : ஏப் 03, 2026 05:32 AM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மதியம் விநாயகர், ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
இரவு 8:30 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
