/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரு இடங்களில் சூதாட்டம்: 7 பேர் கைது
/
இரு இடங்களில் சூதாட்டம்: 7 பேர் கைது
ADDED : நவ 04, 2024 05:52 AM
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் இருவேறு இடங்களில் தனித்தனியே காசு வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம், எல்லையம்மன் கோவில் தெருவில் காசு வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்றபோது, காசு வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம், 46, பரமசிவம், 57, இறையூர் மணிவேல், 28, ரவி, 46, ஆகிய நான்கு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, அதே பகுதியில் மற்றொரு இடத்தில், காசு வைத்து சூதாடிய பெண்ணாடம் அப்துல்லா, 82, ராஜா, 50, குமார், 39, மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்த 400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, பெண்ணாடம் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.