/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகர காங்., சார்பில் காந்தி நினைவு நாள்
/
மாநகர காங்., சார்பில் காந்தி நினைவு நாள்
ADDED : பிப் 01, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாநகர காங்., சார்பில் காந்தி நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலுார் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநகர காங்., தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கிேஷார்குமார், காமராஜ், வட்டார தலைவர் சீத்தாராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் திலகர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், பார்த்திபன், வினுசக்கரவர்த்தி, நகர துணைத் தலைவர் சங்கர், நகர பொருளாளர் ராஜிஷ்சவுகார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.