/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 21, 2025 10:43 PM

கடலுார், ; கடலுாரில் மாவட்ட காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், ராஜா, லாமேக், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஜயகுமார், பார்த்திபன், சார்லஸ், ஜெயச்சந்திரன், மனிஷா, அப்பாண்டைராஜ், பயிற்சி டி.எஸ்.பி., சரவணகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொது அமைதி, பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல், பொது இடங்களில் நிறுவும் விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு போன்றவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. விநாயகர் சிலை நிறுவ விரும்பும் நபர்கள் உரிய ஆவணங்கள் இணைத்து ஆர்.டி.ஓ.,விடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
சிலை நிறுவும் இடம் தனியார் இடமாக இருந்தால் உரிமையாளரிடமும், ஊள்ளாட்சி அமைப்பு இடமாக இருந்தால், சம்மந்தப்பட்ட ஊராட்சியிலும், நெடுஞ்சாலையாக இருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
ஒலி பெருக்கி பயன்படுத்த, சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி பெற வேண்டும். பந்தல் அமைக்க எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை பயன்படுத்த கூடாது. தீயணைப்பு துறையில் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.