ADDED : செப் 28, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : பிரபல கஞ்சா வியாபாரி குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி, 28; இவர் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது.
2 கஞ்சா வழக்குகள் உள்ளது. இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், முனுசாமி குண்டாசில் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.