ADDED : ஏப் 03, 2026 10:51 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நரியன்குப்பம் ஓடை மூங்கில் தோப்பில் விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
போலீசார் நரியன்குப்பம் ஓடைக்கு விரைந்து சென்றனர். அங்கு நடுவீரப்பட்டு, சாலக்கரையை சேர்ந்த தனுஷ் மகன் சாய்குமார்,25;விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருந்தார்.
போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
