ADDED : மே 17, 2026 06:54 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி டி.எஸ்.பி.ராஜா தலைமையில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் அறிவழகன் உள்ளிட்டோர் காடாம்புலியூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த திருவண்ணாமலையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த பழனிவேல், 47; என்பவர், 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடித்தனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
