/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் குப்பையால் துர்நாற்றம்
/
தேசிய நெடுஞ்சாலையில் குப்பையால் துர்நாற்றம்
ADDED : டிச 12, 2025 06:33 AM

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சியி ல் சேரும் குப்பை கழிவு வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் கொட்டுவதால் துார்நாற்றம் வீசி நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு வருகிறது.
பண்ருட்டி நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள், கெடிலம் ஆற்றில் கொட்டப்படும். கடந்த 15 நாட்களாக மழை காரணமாக கெடிலம் ஆற்றில் மழைநீர் வருவதால் ஆற்றில் நகராட்சியினர் குப்பை கொட்ட முடியாமல் கெடிலம் ஆற்றங்கரையோரம் மற்றும் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை கெடிலம் ஆற்று பாலம் பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டி வருகின்றனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் துார்நாற்றம் வீசுகிறது.
அவ்வழியே செல்லும் மக்கள் முக்கை பிடித்து கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் நகராட்சியிடம் புகார் செய்தும், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். குப்பை கொட்டுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

