தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குப்பைகளுக்கு தீ : வாகன ஓட்டிகள் அவதி

 குப்பைகளுக்கு தீ : வாகன ஓட்டிகள் அவதி

 குப்பைகளுக்கு தீ : வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மார் 15, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாறு பாலத்தில் கீழ் கொட்டப்படும் குப்பைகளை மர்நபர்கள் அடிக்கடி தீயிட்டு எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

விருத்தாசலம் பாலக்கரையில் மணிமுக்தாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக திருச்சி, சேலம், ஜெயங்கொண்டம், அரியலுார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன.

மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தில் பயணம் செய்கின்றன.

இந்நிலையில், இந்த பாலத்தின் கீழ் மர்மநபர்கள் குப்பை கழிவுகளை கொட்டிச் செல்வதை வழக்கமான கொண்டுள்ளனர்.

மேலும், இங்கு கொட்டப்படும் குப்பைகளை மர்மநபர்கள் சிலர் அடிக்கடி தீயிட்டு கொளுத்துகின்றனர்.

இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துகொண்டு, போக்குவரத்ததிற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.

இந்நிலையில், நேற்று பாலத்தின் கீழ் கொட்டிக்கிடந்த குப்பையில் மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது.

இதன்காரணமாக, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுதிணறல் ஏற்பட்டு, அப்பகுதியை கடக்ககடும் சிரமம் அடைந்தனர்.

அடிக்கடி இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us