/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிவு
/
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிவு
ADDED : ஏப் 10, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி:கடலுார் மாவட்டம் புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் மொத்தம் 120 மாணவர்கள் படிக்கின்றனர்.
அங்குள்ள சமையல் கூடத்தில் வேலை பார்ப்பவர் சுமதி, 50. அவர், நேற்று சமையல் செய்து கொண்டிருந்தபோது, காஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.
இதையடுத்து, ஆசிரியர்கள், பள்ளியில் இருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றபின், பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். பிறகு, காஸ் நிறுவன ஊழியர்கள் கசிவு ஏற்பட்ட ரப்பர் குழாயை சரி செய்தனர்.