ADDED : நவ 21, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: பா.ம.க., கடலுார் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் குள்ளஞ்சாவடியில் நடந்தது.
உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோகுல கிருஷ்ணன் வரவேற்றார். மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, மாநில உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தடா தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரும் டிச., 21 திருவண்ணாமலை உழவர் பேரியக்க மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, பா.ம.க., நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி., கட்சி நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.