/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போத்திரமங்கலத்தில் பொது மருத்துவ முகாம்
/
போத்திரமங்கலத்தில் பொது மருத்துவ முகாம்
ADDED : டிச 15, 2024 07:15 AM

திட்டக்குடி : திட்டக்குடி ரோட்டரி சங்கம், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை, விநாயகா மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில், பொது மருத்துவ முகாம் நடந்தது.
போத்திரமங்கலத்தில் நடந்த முகாமிற்கு, திட்டக்குடி ரோட்டரி சங்க தலைவர் சிவகிருபா தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க துணை ஆளுநர் தாசன், முகாமை துவக்கி வைத்து ரோட்டரி சங்க சேவைகள் குறித்து பேசினார். பள்ளி முதல்வர் வரவேற்றார்.
இதில், 600க்கும் மேற்பட்டோர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கி, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை, பள்ளி தாளாளர் ராஜா செய்திருந்தார்.