தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்


ADDED : ஏப் 21, 2025 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஸ்ரீமுஷ்ணம் லயன்ஸ் கிளப், நாளா கிளப் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

லயன்ஸ் கிளப் தலைவர் நிஷாந்த், நாளா கிளப் தலைவர் தனரேகா தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் செங்கோல் முன்னிலை வகித்தார். செயலாளர்கள் மகேஷ், கோவிந்தராஜன், பொருளாளர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர்.

இரண்டாம் துணை நிலை ஆளுநர் சாலை கனகதாரன் முகாமை துவக்கி வைத்தார். சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் தட்சிணி, கிருத்திகா தலைமையிலான 13பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனர்.

முகாமில் 175 பேர் கலந்து கொண்டதில் 60 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். நாளா கிளப் ஆலோசகர் புனிதவள்ளி, வட்டார தலைவர் அபிராமி மகாவீர்சந்த், மாவட்ட தலைவர்கள் சிவானந்தம், வேல்முருகன், சுப்ரமணியன், பூவராகமூர்த்தி, ரவிசுந்தர், செயலாளர் அருள்செல்வி, பொருளாளர் அருள்மொழி, உறுப்பினர்கள் வாசுராஜேந்திரன், சாமிநாதன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us