/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்த பொது பயணிகள் வெளியேற்றம்
/
ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்த பொது பயணிகள் வெளியேற்றம்
ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்த பொது பயணிகள் வெளியேற்றம்
ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்த பொது பயணிகள் வெளியேற்றம்
ADDED : டிச 28, 2025 06:05 AM

விருத்தாசலம்: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியை ஆக்கிரமித்திருந்த பயணிகளை ரயில்வே போலீசார் வெளியேற்றினர்.
சென்னையில் இருந்து துாத்துக்குடி, காரைக்குடி, ராமேஸ்வரம், கொல்லம், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதில், முன்பதிவு செய்யாத பொதுப்பயண பெட்டிகளில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் முண்டியடித்தபடி ஏறுகின்றனர்.
சில நேரங்களில் ரயில் இன்ஜினுக்கு முன்னும் பின்னும் உள்ள மகளிர் பெட்டியில் ஆண்களும் ஏறி பயணிக்கின்றனர். அதுபோல், மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பொது பயணிகள் ஏறுவதால், அவர்கள் அமர்ந்து செல்லவும், கழிவறைக்கு செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து இலவச புகார் எண்ணுக்கு அழைப்புகள் குவிகிறது.
அதன்படி, மதுரை - சென்னை சென்ற வைகை சூப்பர் பாஸ்ட் ரயில், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 10:40 மணிக்கு வந்தபோது, ரயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் தீபக் பெபெரல் தலைமையிலான போலீசார் அதிரடியாக நுழைந்து, மாற்றுத்திறனாளிகள் பெட்டியை ஆக்கிரமித்திருந்த பொது பயணிகளை ரயிலில் இருந்து வெளியேற்றினர்.
அவர்களிடம் டிக்கெட் உள்ளதா என பரிசோதனை செய்த போலீசார், மாற்று பெட்டிகளில் ஏறிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதேபோல், மகளிர் பெட்டிகளில் ஆண்கள் பயணிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

