/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெனரேட்டர் அடிக்கடி பழுது; குடிநீர் வழங்குவதில் சிக்கல்
/
ஜெனரேட்டர் அடிக்கடி பழுது; குடிநீர் வழங்குவதில் சிக்கல்
ஜெனரேட்டர் அடிக்கடி பழுது; குடிநீர் வழங்குவதில் சிக்கல்
ஜெனரேட்டர் அடிக்கடி பழுது; குடிநீர் வழங்குவதில் சிக்கல்
ADDED : நவ 06, 2024 11:06 PM
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஜெனரேட்டர் அடிக்கடி பழுது ஏற்படுவதால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
நெல்லிக்குப்பம் நகர பகுதியில் நகராட்சி மூலம் பெரும்பாலான பகுதிக்கு ஜம்புலிங்கம் பூங்காவில் உள்ள பெரிய குடிநீர் தேக்கத் தொட்டியில் இருந்து காலை, மாலை 2 வேளைகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
மின் தடை ஏற்பட்டாலும் கூட அங்குள்ள ஜெனரேட்டர் மூலம் இயக்கப்பட்டு தடையின்றி குடிநீர் வழங்கப்படுகிறது.
ஆனால், சமீப காலமாக ஜெனரேட்டர் அடிக்கடி பழுதாவதால் குடிநீர் தொட்டியில் குடிநீர் ஏற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். பருவமழை தீவிரமடைவதற்குள், ஜெனரேட்டரை முறையாக சீரமைத்து தடையின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.