/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனி நபர் கழிவறை பயனாளிகளுக்கு பரிசு
/
தனி நபர் கழிவறை பயனாளிகளுக்கு பரிசு
ADDED : டிச 12, 2024 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்; மங்களூர் ஒன்றியத்தில் தனிநபர் கழிவறையை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
உலக கழிவறை தினத்தையொட்டி, மங்களூர் ஒன்றியத்தில் தனிநபர் கழிவுறையை சிறப்பாக பராமரித்த பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்தது. அதில், கழிவறையை தினசரி சுகாதாரமாக பயன்படுத்திய அரங்கூர் மற்றும் வினாயகனந்தல் கிராமங்களைச் சேர்ந்த மூன்று பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களை, மங்களூர் பி.டி.ஓ., தண்டபாணி பொன்னாடை அணிவித்து, பரிசு பொருட்கள் வழங்கினார்.
அப்போது, நிர்வாக மேலாளர் ஜெயக்குமாரி, பொறியாளர் செந்தில், வட்டார ஒருங்கிணைப்பாளர் கார் வண்ணன்,, குணசேகரன், அலுவலர்கள் விமலா, �லேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.