
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், பச்சையாங்குப்பம் ஹவுசிங் போர்டு திலக் நகரில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
மாநகராட்சி கவுன்சிலர் கீர்த்தனா ஆறுமுகம் ஏற்பாட்டில் நடந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக டாக்டர் பிரவீன் அய்யப்பன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். விழாவில் ஆறுமுகம், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன், ராசன், ராஜா, குப்புசாமி, ராஜா, ஜெயக்குமார், சுந்தர், குணா, பரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

