ADDED : ஜூன் 02, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் மாணவ, மாணவிகளுக்கு குவைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
ெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் ஆகியோர் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 5 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு 4 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு 3 ஆயிரம், நான்காமிடம் பிடித்தவர்களுக்கு 2 ஆயிரம், ஐந்தாமிடம் பிடித்தவர்களுக்கு,1000 ரூபாய் வழங்கினர். தொடர்ந்து, மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகம் வழங்கப்பட்டது.