ADDED : ஏப் 12, 2025 10:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தில் ஓய்வூதியர்களின் தந்தை நகராவின் 111வது பிறந்த நாள் விழாநடந்தது.
சங்கத் தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.செயலாளர் சண்முகம் வரவேற்றார். இணை செயலாளர் ஆனந்தன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார்.
ஓய்வூதியர்களின்தந்தை நகரா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
துணைத்தலைவர் நடராசன், பொருளாளர் முகுந்தன், இணைசெயலாளர் ஆறுமுகம், பாபு, கோதண்டபாணி, பிரபாகரன் வாழ்த்திப் பேசினர்.
சேனாதிபதி நன்றி கூறினார்.

