/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 08, 2024 05:55 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, உதவி தலைமை ஆசிரியர் காயத்ரி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், இணையவழி குற்றங்கள் மற்றும் அரசு உதவி எண்கள் குறித்த மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளித்தார். இதில், ஆசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இடைநிலை ஆசிரியர் கிறிஸ்துராஜ் செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.