/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
7 ஆண்டுக்கு முன் மாயமான சிறுமி கடலுாரில் தாயிடம் ஒப்படைப்பு
/
7 ஆண்டுக்கு முன் மாயமான சிறுமி கடலுாரில் தாயிடம் ஒப்படைப்பு
7 ஆண்டுக்கு முன் மாயமான சிறுமி கடலுாரில் தாயிடம் ஒப்படைப்பு
7 ஆண்டுக்கு முன் மாயமான சிறுமி கடலுாரில் தாயிடம் ஒப்படைப்பு
ADDED : ஏப் 22, 2025 07:42 AM
கடலுார் : கடலுாரில் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் இருந்த சிறுமி, ஏழு ஆண்டுகளுக்கு பின், தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த 2018ம் ஆண்டு மாயமானார். சற்று மனவளர்ச்சி குன்றிய அந்த சிறுமியை பெற்றோர் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். 2021ம் ஆண்டு கடலுாரில் சாலையில் சுற்றித்திரிந்த அந்த சிறுமியை போலீசார் மீட்டு மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமி குறித்த எந்த தகவலும் பெற முடியவில்லை. இந்நிலையில் கடலுாரை சேர்ந்த நபர் ஒருவர், சென்னையில் சிறுமி படித்த பள்ளிக்கு சென்று சான்றிதழ் கேட்டார். சந்தேகமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுமி கடலுாரில் இருப்பதையறிந்த தாய், உரிய ஆவணங்களை காண்பித்து இரண்டு நாட்களுக்கு முன் சிறுமியை சென்னைக்கு அழைத்துச் சென்றார். சென்னையில் காணாமல் போன சிறுமியை ஏழு ஆண்டுகளுக்குப்பின் கடலுாரில் மீட்டது பெற்றோருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமியின் சான்றிதழ் கேட்ட நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து சென்னை போலீசார் விசாரித்து வருகின்றனர்.