/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் பள்ளி ஆண்டு விழா மாணவிகளுக்கு பரிசு
/
மகளிர் பள்ளி ஆண்டு விழா மாணவிகளுக்கு பரிசு
ADDED : பிப் 13, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் துறைமுகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் ரகுராமன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் குணசுந்தரி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ஜெயந்தி வரவேற்றார்.
மேயர் சுந்தரி ராஜா, முதுநகர் குருதேவ் ஜூவல்லரி உரிமையாளர் சந்திரகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் உயர்த்த பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கவுன்சிலர்கள் கவிதா, பாலசுந்தர், புள்ளியியல் உதவியாளர் கருணாமூர்த்தி வாழ்த்தி பேசினர்.
உதவித் தலைமை ஆசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.