ADDED : பிப் 03, 2025 06:47 AM

சிதம்பரம் :   காட்டுமன்னார்கோவில் ஜி.கே., பள்ளியில் நடந்த ெஹல்த்தி ஜூனியர் 'செப்' போட்டியில் மாணவர்கள் பங்கேற்று பாரம்பரிய உணவு தயாரித்தனர்.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியை கல்வி குழும தலைவர் குமாரராஜா துவக்கி வைத்தார்.
போட்டியில் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று, புதுச்சேரி அக்கார்டு ேஹாட்டல் செப் மணிகண்ட பிரபு முன்னிலையில் பாரம்பரிய உணவு தயாரித்து   காட்டினார்.
நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் காமராஜ், செயலர் உபயதுல்லா, ஜி.கே.கல்வி குழும மேலாண் இயக்குனர் அருண், இயக்குனர் டாக்டர் ஐஸ்வர்யா அருண், டாக்டர்கள் அகிலன், ரம்யா அகிலன், சேலம் வின்னர் விகாஸ் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி., பள்ளியின் இயக்குநர் அனிதா மோகன் குமார், பங்கேற்றனர்.
பள்ளி முதல்வர்கள் பார்த்திபன், தேவதாஸ், பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

