/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆட்டு கொட்டகை சுவர் இடிந்து 8 ஆடுகள் சாவு
/
ஆட்டு கொட்டகை சுவர் இடிந்து 8 ஆடுகள் சாவு
ADDED : நவ 04, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : மழை காரண மாக ஆட்டு கொட்டகை இடிந்து விழுந்து எட்டு ஆடுகள் பலியாகின.
புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களத்தைச் சேர்ந்தவர் கணநாதன், 50; இவர் தனது வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2.00 மணியளவில் பெய்த கன மழை காரணமாக, கண நாதன் ஆட்டு கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கொட்டகை உள்ளே கட்டியிருந்த எட்டு வெள்ளாடுகள் இறந்தன.
தகவலறிந்த கால்நடைத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுசெய்தனர்.