/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சரில் கோத்ரேஜ் ஷோரூம் திறப்பு
/
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சரில் கோத்ரேஜ் ஷோரூம் திறப்பு
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சரில் கோத்ரேஜ் ஷோரூம் திறப்பு
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சரில் கோத்ரேஜ் ஷோரூம் திறப்பு
ADDED : செப் 05, 2025 03:29 AM

மந்தாரக்குப்பம்: கடலுார் மாவட்டம், வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சரில் புதிய கோத்ரேஜ் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். வணிகர் சங்க மாவட்ட நிர்வாகிகள் வீரப்பன், சேகர் முன்னிலை வகித்தனர்.
நெய்வேலி வர்த்தக சங்க தலைவர் வேலுச்சாமி, டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன், சாந்தி ராஜமாரியப்பன், நிர்வாக இயக்குநர்கள் கார்த்திக்-பிரியதர்ஷனி, சசிதரன்- மதனா, சிவதர்ஷிகா வரவேற்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா ஷோரூமை திறந்து வைத்தார். விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி அகர்சந்த், கோத்ரேஜ் லாக்கர் முதல் விற்பனையை துவக்கி வைக்க, நெய்வேலி முருகன் பேக்கரி விக்னேஷ் பெற்றுக் கொண்டார்.
வணிகர் சங்க கடலுார் தலைவர் துரைராஜ், கோத் ரேஜ் பீரோ, பர்னிச்சர் விற்பனையை துவக்கி வைக்க ஆர்.கே., குரூப்ஸ் கண்ணன் பெற்றுக் கொண்டார்.
நாடார் சங்கம் மற்றும் வடலுார் வர்த்தக சங்க நிர்வாகிகள், மாவட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள், டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் மேலாளர்கள் கணேஷ்குமார், ஜீவானந்தம், ஸ்ரீதரன், சித்ரா, மோகன் பங்கேற்றனர்.
கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கோத்ரேஜ் நேரடி மொத்த விற்பனையாளராக டி.ஆர். எம்., சாந்தி பர்னிச்சர் ஷோரூம் உள்ளது என, விற்பனை மேலாளர்கள் நவீன், சங்கர், மோகன் கூறினர். திருமால் கொழுந்து நன்றி கூறினார்.