ADDED : ஜன 18, 2025 02:05 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் ஜேசீஸ் சார்பில் நடந்த கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் முன்புறம் நடந்த போட்டிக்கு ஜேசீஸ் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார்.சாசன தலைவர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.
பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் போட்டிகளை துவக்கிவைத்தார். இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் ரங்கோலி, சிக்கல், கருத்தியல் ஆகிய தலைப்புகளில் கோலம் வரைந்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ஆத்மா குழு வட்டார தலைவர் தங்க.ஆனந்தன், த.வீ.செ. கல்விக்குழும செயலாளர் செந்தில்நாதன், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரா, ஆதவன் பாத்திர மாளிகை முத்துராமலிங்கம்,மாருதி ஏஜென்சீஸ் விஜயன், விநாயகா டிரேடர்ஸ் வடமலை, உள்ளிட்ட ஜேசீஸ் உறுப்பினர்கள் பலர் பரிசுகள் வழங்கினர்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
இதில் ஜேசீஸ் முன்னாள் தலைவர்கள் மனோகர், வேல்முருகன், குருராஜன்,தினகரன், சிவக்குமார், செந்தூரபாண்டியன், கோபிநாத், துணைத்தலைவர்கள் குப்புசாமி,சந்திரகுமார், திலீபன்,செயலாளர் மகேந்திரவர்மன், பொருளாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.