/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொலு பொம்மை தயாரிப்பு பணி தீவிரம்
/
கொலு பொம்மை தயாரிப்பு பணி தீவிரம்
ADDED : செப் 20, 2025 11:58 PM

கடலுார் : கடலுாரில் நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மை தயாரிக்கும் பணி, வர்ணம் பூசும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நவராத்திரி விழா, நாளை .22ம் தேதி துவங்கி, வரும் 2ம் தேதி வரை நடக்கிறது.
நவாரத்திரியின் ஒன்பது நாட்களிலும் கொலு பொம்மை வைத்து, பூஜை செய்து வழிபடுவது வழக்கம். வீடுகளில் வைக்கப்படும் கொலுவில் விநாயகர், சீதா ராமர் கல்யாணம், அஷ்டலட்சுமி, திருப்பதி சீனிவாச பெருமாள் என, கொலு பொம்மைகளும் இடம் பெற்றிருக்கும்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு கடலுார் சாவடி மற்றும் வண்டிப்பாளையம் பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண் மூலம் செய்த கொலு பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டி, விற்பனைக்கு தயார் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த கொலு பொம்மைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.