/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகள் அலட்சியத்தால் அரசு ஒதுக்கீட்டு தொகை வீண்
/
அதிகாரிகள் அலட்சியத்தால் அரசு ஒதுக்கீட்டு தொகை வீண்
அதிகாரிகள் அலட்சியத்தால் அரசு ஒதுக்கீட்டு தொகை வீண்
அதிகாரிகள் அலட்சியத்தால் அரசு ஒதுக்கீட்டு தொகை வீண்
ADDED : ஜன 20, 2025 04:19 AM

பெண்ணாடம் : காட்சிப்பொருளாக உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த கொத்தட்டையில் ஊராட்சி சேவை மைய கட்டடம் அருகே கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், ரூ.6 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டது.
ஆனால், ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காரணமாக குடிநீர் நிலையம் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பாழடைந்து காட்சிப்பொருளாகி வருகிறது.
எனவே, கிராம மக்கள் நலன்கருதி, காட்சிப்பொருளான குடிநீர் வழங்கும் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.