அரசு கலை அறிவியல் கல்லுாரி 5வது பட்டமளிப்பு விழா
அரசு கலை அறிவியல் கல்லுாரி 5வது பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 11, 2026 10:17 PM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: குமராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 5 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மீனா வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி, இளங்கலை பட்டத்தோடு தனது கல்வி படிப்பை நிறுத்தாமல், தொடர்ந்து உயர்கல்வி பயில வேண்டும்.
தங்களுக்கான வேலை தேடும்போது, தொழில்நுட்ப அறிவியலை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நல்ல பணியில் சேர வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில், துறை தலைவர்கள் லெட்டினென்ட் சரவணன், சிற்றரசு, செந்தில்குமார், தேவநாதன், நுாலகர் நடராஜன், கல்லுாரி அலுவலர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
