ADDED : மார் 13, 2026 06:50 AM

அ நிறம் | அளவு
கடலுார்: உளுந்துார்பேட்டையிலிருந்து கடலுாருக்கு வந்த அரசு பஸ், புதுநகர் போலீஸ்நிலையம் எதிரே பழுதாகி நின்றது.
கடலுாரிலிருந்து உளுந்துார்பேட்டைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினமும் இயங்கி வருகின்றன. நேற்று மதியம் 12.30 மணியளவில் உளுந்துார்பேட்டையிலிருந்து கடலுாருக்கு வந்த அரசு பஸ், புதுநகர் போலீஸ்நிலையம் எதிரே பழுதாகி நின்றது.
பஸ்சில் பயணித்த மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்தனர்.
பெரும்பாலான பயணிகள் தலைமை தபால்நிலையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி விட்டதால், பஸ்சில் அதிகளவு பயணிகள் இல்லை.
எனினும் ஏழை, நடுத்தர மக்கள் போக்குவரத்திற்காக நம்பியுள்ள அரசு பஸ்களை முறையாக பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
