/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஜய் கட்சி மாநாட்டுக்கு அரசு நெருக்கடி த.மா.கா., தலைவர் வாசன் ஆதங்கம்
/
விஜய் கட்சி மாநாட்டுக்கு அரசு நெருக்கடி த.மா.கா., தலைவர் வாசன் ஆதங்கம்
விஜய் கட்சி மாநாட்டுக்கு அரசு நெருக்கடி த.மா.கா., தலைவர் வாசன் ஆதங்கம்
விஜய் கட்சி மாநாட்டுக்கு அரசு நெருக்கடி த.மா.கா., தலைவர் வாசன் ஆதங்கம்
ADDED : செப் 27, 2024 04:55 AM

கடலுார்: 'மது விலக்கு பிரச்னையில் மக்களை அரசு ஏமாற்றி வருகிறது' என த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.
கடலுாரில் த.மா.கா., மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என மூப்பனார் இருந்த போதே அவரது தலைமையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி, த.மா.கா., பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. மது கடைகளால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, இளைஞர்கள் சீரழிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னையில் மக்களை அரசு ஏமாற்றி வருகிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது, ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர், தொண்டனுக்கு இருக்கும் ஆசைதான். இதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது என்பது, அவர்களின் கட்சி முடிவு.
தமிழ்நாட்டில் மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வரும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக உள்ளனர். அதனால், ஆட்சி மாற்றம் என்பது 100 சதவீதம் உறுதி
வரும் காலம் த.மா.கா.,விற்கு வசந்த காலம். தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டிற்கு அரசு பயங்கர கட்டுப்பாடு, நெருக்கடி கொடுப்பதை மறுக்க முடியாது. கெடுபிடிகளையும் மீறி விஜய் கட்சி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.