/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் ஆயத்த மாநாடு அரசு பணியாளர் சங்கம் முடிவு
/
பண்ருட்டியில் ஆயத்த மாநாடு அரசு பணியாளர் சங்கம் முடிவு
பண்ருட்டியில் ஆயத்த மாநாடு அரசு பணியாளர் சங்கம் முடிவு
பண்ருட்டியில் ஆயத்த மாநாடு அரசு பணியாளர் சங்கம் முடிவு
ADDED : பிப் 06, 2025 11:18 PM
கடலுார்: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட ஆயத்த மாநாடு பண்ருட்டியில் 23ம் தேதி நடக்கிறது என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.
கடலுாரில் அவர் கூறியதாவது;
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் இருந்து வந்தது. சமீபத்தில் மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழக அரசு இந்த மூன்று ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இதில் ஆய்வு செய்ய ஏதுமில்லை.
தமிழக அரசு அமைத்துள்ள குழுவை கலைத்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 10,000 ரூபாய் வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்க வேண்டும். தமிழக அரசு நிர்வாகத்தில் 5 லட்சம் பேர் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி பண்ருட்டியில் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

