மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அரசு ஊழியர்கள் அதிருப்தி
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அரசு ஊழியர்கள் அதிருப்தி
ADDED : ஆக 19, 2026 03:37 AM
நா டு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
இந்த பணியை மேற்கொள்பவர் தங்கள் மொபைல் போனில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, அதன்பிறகு கணக்கெடுக்கும் விபரங்களை தங்கள் மொபைல் போனில் இருந்து உடனுக்குடன் அனுப்ப உத்தரவி டப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தனியாக வழங்கவில்லை. மாறாக, இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் வழக்கமான பணியை முடித்த பிறகே கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளனர்.
இதனால் காலை 6 மணிக்கே கணக்கெடுக்கும் பணியை துவங்க வேண்டியுள்ளது. 2 மணி நேரம் செய்து விட்டு தங்களது வழக்கமான பணிக்கு செல்கிறார்கள். அந்த வேலையை மாலை 5 மணிக்கு முடித்து கொண்டு அதன்பிறகு இரவு 9 மணி வரை கணக் கெடுக்கும் பணியை செய்கின்றனர்.
கணக்கெடுப்பிற்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்றால், காலையில் வருமாறு கூறுகின்றனர். இதனால், இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பெரும் அலைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக பெண் ஊழியர்கள், தங்கள் குடும்பத்தை கவனிக்க முடியாமல் தத்தளித்து கொண்டுள்ளனர்.
