/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒதுக்குப்புறமாக மைதானம்; அரசு நிதி 'பாழ்'
/
ஒதுக்குப்புறமாக மைதானம்; அரசு நிதி 'பாழ்'
ADDED : ஜன 02, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் கபடி, வாலிபால், டென்னிஸ் மைதானம் அமைக்க ஊரகவேலை உறுதித் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்காக, கொத்தட்டை - இறையூர் செல்லும் சாலையோரம் இடம் தேர்வு செய்து மைதானம் அமைக்கப்பட்டது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக மைதானம் அமைந்துள்ளதால் அங்கு செல்ல முடியாமல் இளைஞர்கள் விளையாட ஆர்வமின்றி உள்ளனர். இதனால், மைதானத்தில் புற்செடிகள் வளர்ந்து வருவதுடன் நிதியும் பாழாகிறது என இளைஞர்கள் புலம்பி வருகின்றனர்.

