ADDED : பிப் 27, 2026 05:09 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக, 2.49 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் ஆய்வகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நேற்று சென்னை தலைமை செயலகத்தில் காணொளி மூலம் நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சி.இ.ஒ.ரமேஷ் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். பொதுப்பணித்துறை அலுவலர் முத்துப்பாண்டி, ஆசிரியர் பயிற்றுநர் செழியன், கவுன்சிலர் சண்முகவள்ளி பழனி, ஜரின்னிஷா சபீர், கலைவாணி மதியழகன், இளைஞர் அணி அப்பால் சம்பத், துணை அமைப்பாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பிரபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
