தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குப்பை எரிப்பால் அரசு � நெட் � கேபிள் சேதம்

 குப்பை எரிப்பால் அரசு � நெட் � கேபிள் சேதம்

 குப்பை எரிப்பால் அரசு � நெட் � கேபிள் சேதம்


ADDED : ஜூலை 23, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடலுார்: குப்பையை எரித்த தீயில் அரசு 'இண்டர்நெட் கேபிள்' சேதமடைந்து பணிகள் பாதிக்கப்பட்டன

தமிழக அரசின் 'டான்பிநெட்' எனும் அரசு இணைய சேவை கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கடலுார் ஊராட்சி ஒன்றியம் வழியாக, மாவட்டத்தில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேபிள் மூலம் வழங்கப்படுகிறது.

வடலுார் அய்யன் ஏரி அருகே இந்த கேபிள் புதைக்கப்பட்ட இடத்தில் குப்பை கொட்டப்பட்டு, நேற்று விஷமிகள் சிலர் குப்பையை எரித்ததால், 15 மீ., வரை கேபிள் எரிந்து சேதமடைந்தது.

இதனால் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள கிராம சேவை மையங்களில் இணைய இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம், காலை 11:00 மணி முதல், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம அரசு அலுவலகங்களில், இணைய சேவை துண்டிப்பால், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பணிகள் பாதிக்கப்பட்டு அவதியடைந்தனர்.

கேபிள் பராமரிப்பு பணி டெண்டர் எடுத்த தனியார் நிறுவன ஊழியர்கள் வடலுாரில் சேதமடைந்த கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மாலை 5:00 மணிக்கு பிறகு கேபிள் சரி செய்யப்பட்டு இணைப்பு கொடுக்கப்பட்டது.

வடலுார் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் தொடங்கி, பொதுமக்கள் வரை, அனைவரும் குப்பை எரிப்பில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

நகராட்சி நிர்வாகம் இது குறித்து கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் பிரச்னையில் தலையிட்டு குப்பை எரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us