/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க கூட்டம்
/
கடலுாரில் அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க கூட்டம்
ADDED : செப் 23, 2024 07:53 AM

கடலுார் : அரசு நிறுத்தி வைத்துள்ள சலுகை மற்றும் நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும் என, அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கடலுாரில், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரகுநாதன் வரவேற்றார். சங்க அகில இந்திய தலைவர் கணேசன், மாநிலத் தலைவர் மதுரம், மாநில பொதுச் செயலாளர் முனியப்பன் பேசினர்.
மாநில நிர்வாகி சங்கர், மாவட்ட நிர்வாகிகள் பழனி, சுந்தரமூர்த்தி, வின்சென்ட் பவுல்ராஜ், பச்சையப்பன், தண்டபாணி, காமராஜ், பெருமாள், பக்தவச்சலம், மூர்த்தி, ராமானுஜம், சுப்புராயலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட சலுகைகள் உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் சம்பத்குமார் நன்றி கூறினார்.