/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் பணியாளர்களை பாதுகாக்க அரசாணை: அனைத்து நிறுவனங்களும் கடைபிடிக்க உத்தரவு
/
பெண் பணியாளர்களை பாதுகாக்க அரசாணை: அனைத்து நிறுவனங்களும் கடைபிடிக்க உத்தரவு
பெண் பணியாளர்களை பாதுகாக்க அரசாணை: அனைத்து நிறுவனங்களும் கடைபிடிக்க உத்தரவு
பெண் பணியாளர்களை பாதுகாக்க அரசாணை: அனைத்து நிறுவனங்களும் கடைபிடிக்க உத்தரவு
ADDED : ஜூலை 20, 2025 06:53 AM
கடலுார், : பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாத்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை, அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பணியிடத்தில், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும், பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களுக்கு தீர்வுகாணவும், 2013ல் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும், அனைத்துபணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை விசாரிக்க, உள்ளக புகார் குழு அமைக்கப்படுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இந்த வழிமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில், வேலையளிப்பவர் மீது 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகைசெய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில், உள்ளக புகார் குழு அமைக்கப்படுவதோடு, சட்டத்தின்வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். உள்ளக குழுவின் உறுப்பினர்கள் விபரம், பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு தீர்வு காணும்வழிமுறைகள் ஆகியவற்றை அனைத்து பணியாளர்களும் தெளிவாக காணக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.
இப்பிரச்னையை கையாள,நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க வழிமுறைகளை, அரசாணையாக, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறைவெளியிட்டுள்ளது.
இதை அனைத்து வேலையளிப்பவர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.