தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசு பள்ளிக்கு சைக்கிள் ெஷட் தேவை

அரசு பள்ளிக்கு சைக்கிள் ெஷட் தேவை

அரசு பள்ளிக்கு சைக்கிள் ெஷட் தேவை


UPDATED : நவ 17, 2026 08:39 PM

ADDED : நவ 17, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 08:39 PM ADDED : நவ 17, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: எருமனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் சைக்கிள் ெஷட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் அடுத்த எருமனுார் அரசு உயர்நிலை பள்ளியில் எருமனுார், சின்னவடவாடி, எ.வடக்குப்பம், ராசாபாளையம், ரெட்டிக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் வந்து செல்கின்றனர். பள்ளி வளாகத்தில் சைக்கிள் ெஷட் இல்லாததால், மாணவர்கள் திறந்த வெளியில் தங்களின் சைக்கிள்களை நிறுத்தி செல்லும் அவல நிலை உள்ளது.

இதனால், சைக்கிள்கள் வெயிலிலும், மழையிலும் நின்று அடிக்கடி பழுதாகி வருவதால், மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர்.

எனவே, மாணவர்கள் நலன் கருதி, பள்ளி வளாகத்தில் சைக்கிள் ெஷட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us