/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழமையான விளையாட்டுகள் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்
/
பழமையான விளையாட்டுகள் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஏப் 16, 2025 08:25 PM

புவனகிரி: மஞ்சக்கொல்லை அரசு மேல் நிலைப்பள்ளியில் பழமையான விளையாட்டுகளை மீட்டெடுப்பதில் ஆர்வம் செலுத்துவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிரிக்கெட், வாலிபால், டென்னிஸ், கேரம், செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தற்போது இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தமிழர்களின் பாராம்பரியமான விளையாட்டுகளான வர்மம், சிலம்பம், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு கலைகள், கண்ணாமூச்சி, சில்லி, ஆபியம், தாயம், பரமபதம், பல்லாங்குழி மற்றும் நொண்டி விளையாட்டுகளுடன், மூளைக்கு வேலை தரும் வகையில் சிந்தனை மிக்க, எண் கணித விளையாட்டுகள் காணாமல் போனது.
இந்நிலையில் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாரம்பரிய தமிழர்களின் விளையாட்டுகள் குறித்து தற்போது, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர் ரவி, உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி உள்ளிட்ட குழுவினர் பயிற்சி அளிக்கின்றனர். மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.