/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி சமூக விரோதிகள் அட்டகாசம்
/
சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி சமூக விரோதிகள் அட்டகாசம்
சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி சமூக விரோதிகள் அட்டகாசம்
சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி சமூக விரோதிகள் அட்டகாசம்
ADDED : டிச 01, 2025 06:30 AM

நடுவீரப்பட்டு: புதுப்பாளையம் அரசு பள்ளிக்கு சாலை வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமத்தினை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளிக்கு போதிய கட்டட வசதிகள் உள்ளது. ஆனால் சுற்றுச்சுவர், சாலை வசதி இல்லாததால் மாணவர்கள்,ஆசிரியர்கள் அவதி யடைந்து வருகின்றனர்.
மேலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பள்ளியின் கட்டடங்களையும் அடிக்கடி சேதப்படுத்துகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' விடுமுறை நாட்களில் இந்த பள்ளியில் சிலர், கால்நடைகள் மேய்க்கும் அவல நிலை உள்ளது.
பள்ளிக்கு செல்லும் சாலையில் கற்கள் அதிகளவு உள்ளதால் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் சாலையை சரி செய்து, பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

