/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசின் சாதனை விளம்பர பேனர் சாய்ந்தது: அதிகாரிகள் அலட்சியம்
/
அரசின் சாதனை விளம்பர பேனர் சாய்ந்தது: அதிகாரிகள் அலட்சியம்
அரசின் சாதனை விளம்பர பேனர் சாய்ந்தது: அதிகாரிகள் அலட்சியம்
அரசின் சாதனை விளம்பர பேனர் சாய்ந்தது: அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜூலை 10, 2025 07:14 AM
வேப்பூர் :  நல்லுார்  ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க., அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை விளம்பர பேனர் சாய்ந்து விழுந்தது.
தி.மு.க., ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, துறைகள் ரீதியாக செயல்படுத்திய திட்டப்பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து அரசு அலுவலகங்கள் முன் விளம்பர பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகம் மறைமுக உத்தரவிட்டது. அதன்படி, ஊரக வளர்ச்சி துறை சார்பில் நல்லுார் ஒன்றிய ஊராட்சிகளில் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த பேனர், ஒன்றிய அலுவலக கட்டட துாணில்  நான்கு ஆண்டுகள் சாதனை விளம்பர பேனர் வைக்கப்பட்டது.
பொது இடங்கள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பேனர் வைக்க அரசு தடை செய்த நிலையில், எளிய மக்கள் வரும் ஒன்றிய அலுவலகம் முன் அரசு அதிகாரிகள் அலட்சியமாக பேனரை கட்டி வைத்துள்ளனர். நேற்று எதிர்பாராத விதமாக காற்று பலமாக வீசியதில்,  விளம்பர பேனர் சாய்ந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக மக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கவில்லை. பொது இடங்களில் பேனர் வைக்க தடை செய்த அரசே, பேனர் வைத்து, அதனை முறையாக பராமரிக்க தவறியது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

