/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் முட்டுக்கட்டை
/
துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் முட்டுக்கட்டை
ADDED : பிப் 01, 2025 12:35 AM
புவனகிரி : தமிழகத்தில் துணைவேந்தரை நியமிக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு கவர்னர் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறார் என, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டினார்.
புவனகிரியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
தமிழகத்தில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு கவர்னர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவிலேயே வலிமையான கல்வி கட்டமைப்பை கொண்டுள்ள தமிழகத்தில் வெளிப்படையான யுத்தத்தை கவர்னர் அறிவித்திருக்கிறார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் இருப்பது பல்கலைக்கழக நிர்வாகத்தை முடக்கும் செயலாகும். பல்கலைக்கழக நிர்வாகத்தை முடக்குகிற கவர்னர் ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வன், வி.சி., கட்சி சிதம்பரம் லோக்சபா தொகுதி செயலாளர் செல்லப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.