/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கலை கல்லுாரி காணொலி மூலம் திறப்பு
/
அரசு கலை கல்லுாரி காணொலி மூலம் திறப்பு
ADDED : அக் 31, 2024 05:31 AM

காட்டுமன்னார்கோவில்: கீழ வன்னியூர் கிராமத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திறப்பு விழா நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழ வன்னியூர் கிராமத்தில் 7 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கோவி.செழியின் உடனிருந்தனர்.
இதனையொட்டி கீழ வன்னியூர் கிராமத்தில் நடந்த விழாவில், கல்லுாரி முதல்வர் மீனா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., சப் கலெக்டர் ராஷ்மி ராணி குத்துவிளக்கேற்றினர்.
விழாவில், கல்லுாரி கட்டுவதற்கு நிலம் தானமாக வழங்கிய நாட்டுச்சின்ன பண்ணை குடும்பத்தைச் சேர்ந்த சேதுராமன், கேதார்நாதன், சுவேதகுமார், செயற்பொறியாளர் சச்சிதானந்தம், குமராட்சி ஒன்றிய சேர்மன் பூங்குழலி பாண்டியன், தாசில்தார் சிவக்குமார், பி.டி.ஓ., சரவணன், குமராட்சி ஊராட்சி தலைவர் தமிழ்வாணன், ஒப்பந்ததாரர் சரவணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, சோழன், வி.சி., கட்சி மாவட்டச் செயலாளர் மணவாளன், பனை நல வாரிய உறுப்பினர் பசுமைவளவன், கல்லுாரி முன்னாள் முதல்வர்கள் அறவாழி, சீதாராமன், ரவி, உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ் துறை தலைவர் சிற்றரசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
உடற்கல்வித் துறை இயக்குனர் சரவணன் நன்றி கூறினார்.