ADDED : அக் 16, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்டத்தில் கடைக்கோடியிலுள்ள ஒன்றிய ஊராட்சிகளில் ஆண்டுதோறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கான்கிரீட் வீடுகள், குடிநீர் பைப் லைன் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை, ஊராட்சி தலைவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கணக்குகள் எழுதி பணத்தை சுருட்டி வந்தனர். தற்போது, பதவிக்காலம் முடிய உள்ளதால் ஊராட்சிக்கு நிதி வழங்குவது விரைவில் நிறுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், அச்சமடைந்த ஊராட்சி தலைவர்கள் ஒன்றிய அதிகாரிகளை சிறப்பாக கவனித்து அரசு நிதியை அசுர வேகத்தில் சுருட்டுகின்றனர்.