நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் கடைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புவனகிரி லட்சுமிநகர் பச்சமுத்து மகள் மீனாட்சி, 21; பி.ஏ., பட்டதாரி. அவரது சகோதரர் மணிகண்டமுத்து நடத்தி வரும் எலக்ட்ரானிக்ஸ் கடையில் உதவியாக பணியாற்றி வந்தார்.
கடந்த19ம் தேதி மதியம் உணவு அருந்த வீட்டிற்கு சென்ற மீனாட்சியை காணவில்லை. இதுகுறித்து பச்சமுத்து கொடுத்த புகாரில், புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.